ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போதைய ரசிகர்கள் தங்களது அபிமான ஹீரோக்களிடமிருந்து படத்துக்குப் படம் வித்தியாசமான பர்பாமென்ஸை எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் காதல், காமெடி என்ற ட்ரேக்கில் சென்று கொண்டிருந்த நடிகர்கள்கூட சமீபகாலமாக புதுமையான கதை தேடலில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், வாலு, இது நம்ம ஆளு படங்களில் ரொமான்டி ஹீரோவாக நடித்த சிம்பு, தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில், அப்பா, இரண்டு மகன்கள் என்று நடிக்கிறார் சிம்பு. இதில் இரண்டு இளவட்ட சிம்புவில் ஒருவர் மதுரை மைக்கேலாக நடிக்கிறார். இது ஒரு அதிரடியான வேடம். தலையில் நிறைய முடி, தாடி என்ற கெட்டப்பில் நடிக்கிறார். இன்னொரு இளவட்ட வேடம் சாப்ட்டான வேடமாம். ஆனால் இப்போது மைக்கேல் கேரக்டருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்தபடியாக வயதான சிம்புவின் வேடத்துக்கான காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.
கதைப்படி அந்த கெட்டப்பில் இந்தியன் படத்தில் கமல் நடித்தது போன்று 60 வயது தாத்தாவாக நடிக்கிறாராம் சிம்பு. முழுக்க முழுக்க தன்னை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் வேடம் என்பதால் இந்த வேடத்துக்காக தன்னை முழுமையாக தயார்படுத்தி வரும் சிம்பு, அந்த வேடத்தில் தனது நடை உடை பாவணை, குரல் என அனைத்திலும் 60 வயது தாத்தாவாக மாறி விடுவதால், இது சிம்புவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கக்கூடிய கேரக்டராக அமையும் என்கிறார்கள்.