ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழில் 'பொய்' படத்தில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை விமலா ராமன். தற்போது நீண்ட நாட்கள் கழித்து மலையாள சினிமா உலகில் 'ஒப்பம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் விமலா ராமன்.. பிரியதர்ஷன் இயக்கும் இந்தப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார்.. 'காலேஜ் குமரன்' படத்தை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிப்பது விமலா ராமனுக்கு சந்தோசம் தான் என்றாலும், அதைவிட சந்தோசம் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிக்கிறோம் என்பதுதானாம். ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்த விமலா ராமன் சிறுவயதில் பார்த்து வளர்ந்தது எல்லாம் காமெடி படங்களைத்தான்.
அதிலும் மலையாளத்தில் இன்னார் தான் படங்களை இயக்கினார் என்கிற விபரங்கள் எதுவும் இன்றி சின்ன வயதில் தான் பார்த்து பிரமித்த பல படங்களை எல்லாம் இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்கினார் என பின்னாளில் தெரியவந்தபோது அவர்மீது மிகப்பெரிய பிரமிப்பே ஏற்பட்டதாம். தற்போது அவர் படத்தில் நடிக்கவேண்டும் என்கிற விமலா ராமனின் ஆசையும் நிறைவேறியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாமல் அதிக அளவில் ஷாட்டுக்களை எடுக்காமல், ஏற்கனவே தனது மைண்ட்டில் எடிட் செய்யப்பட்டு பதிந்துள்ள காட்சிக்கு எந்தவிதமான ஷாட் மட்டும் போதும் என்பதை உணர்ந்து கச்சிதமாக படப்பிடிப்பை நடத்துவாராம் பிரியதர்ஷன். அவரது படத்தில் நடிப்பதும் அவர் படம் இயக்குவதை பார்ப்பதும் பாக்கியம் என உருகுகிறார் விமலா ராமன்..!