ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல டோலிவுட் இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கவுள்ள புதிய படத்திற்கு நக்ஷட்ரம் என பெயரிட்டுள்ளார். இப்படத்தில் சுதீப் கிஷான் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மேலும் நாயகி வேட்டையில் ஈடுபட்ட படக்குழுவினர் இப்படத்தில் நடிக்க இரண்டு நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரெஜினா மற்றும் நந்திதா ராஜ் என இரண்டு நாயகிகள் நக்ஷட்ரம் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கிருஷ்ண வம்சி முதலில் பாலகிருஷ்ணாவின் ரைத்து படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் ரைத்து படத்தை பாலகிருஷ்ணா, கௌதமிபுத்ர சதர்கனி படத்திற்கு பின்னர் தனது 101வது படமாக உருவாக்கலாம் என வம்சியிடம் கூறிவிட்டார். இதனால் அடுத்து அனுஷ்கா நடிக்கும் ருத்ராக்ஷா படத்தை வம்சி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நக்ஷட்ரம் படத்தை இயக்க முடிவு செய்துவிட்டார்