ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் அதிரடி இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? மோகன்லாலை வைத்து 'மாடம்பி', 'கிராண்ட் மாஸ்டர்', 'மிஸ்டர் பிராடு' என மூன்று படங்களை இயக்கியவர் தான் இந்த உன்னி கிருஷ்ணன். மோகன்லாலை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. அவரது அனைத்து பிரச்சனைகளிலும் முதல் ஆளாக குரல் கொடுப்பார். கடந்த 2014ல் இவருக்கும் பிரபல தயாரிப்பாளருமான லிபர்ட்டி பஷீருக்கும் 'மிஸ்டர் ஃப்ராடு' படத்தை தியேட்டர்களில் திரையிடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டபோது சவால் விட்டு படத்தை ரிலீஸ் பண்ணி காட்டிய துணிச்சல்காரர். கமலை விட மோகன்லால் தான் பெஸ்ட் என அதிரடியாக் ஸ்டேட்மென்ட் கொடுத்தவர்.. கடுமையான விமர்சகரும் கூட
கிட்டத்தட்ட கேரளா சினிமாவின் வசிஷ்டர் என்று சொல்லப்படும் இவரது வாயால் தான் 'பிரம்மரிஷி' பட்டம் பெற்ற விசுவாமித்திரர் ஆகியுள்ளார் நடிகர் பஹத் பாசில். கடந்தவாரம் வெளியான பஹத் பாசிலின் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தை பார்த்த உன்னி கிருஷ்ணன், அதில் பஹத் பாசிலின் நடிப்பைக்கண்டு அசந்து போய், இவர் பல தோல்விகளுக்கு பின்னும் மீண்டு எழுந்து சதமடித்த கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவை போன்றவர் என்று பாராட்டியுள்ளார். லாராவின் பல குணாதிசயங்கள் பஹத் பாசிலிடம் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல பஹத் பாசில் வேறு யாருக்காகவும் தனது படங்களை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டாம் எனவும் அவருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.