ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜுவா எனும் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் அகில் தனது நடிப்பிலும் நடனத்திலும் ரசிகர்களைக் கவர தவறவில்லை. அகிலின் அறிமுக படத்தின் தோல்வி காரணமாக அவரது அடுத்த படத்தில் நாகார்ஜுனா அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார். கஞ்சே எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் அகில் அடுத்ததாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் அகிலின் அடுத்த படத்தை இயக்கக் கூடும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. யார் இயக்குனராக இருந்தாலும் இப்படத்தை டிவிவி தனய்யா தான் தயாரிக்கவிருக்கிறார். நிதின்,சமந்தா ஜோடி சேர்ந்திருக்கும் அ..ஆ எனும் படத்தை இயக்கி வரும் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் அப்படத்தை முடித்த பின்னர் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். எனவே டிவிவி தனய்யா - திரிவிக்ரம் - அகில் கூட்டணி அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.