ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் விருப்ப நாயகியாக மாறியுள்ள ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுடன் இணைந்து நடித்த ப்ரூஸ் லீ படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுனின் சரைனொடு படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் ஜுனியர் என்.டி.ஆருடன் நன்னுக்கு பிரேமதோ படத்திலும் நாயகியாக நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கஞ்சே படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த வருண் தேஜ் நடிப்பில் அடுத்து லோபர் திரைப்படம் திரைக்கு தயாராகி விட்டது. அப்படத்திற்கு பின்னர் வருண் தேஜ் நடிக்கும் படத்திற்கு ராகுல் ப்ரீத்தி சிங்கை ஜோடியாக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் கோபிசந்த் இயக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது சூடு பிடித்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தாகூர் மது, நல்லமலபு புஜ்ஜி ஆகியோர் ராகுல் ப்ரீத்தி சிங்கை தொடர்பு கொண்டு இப்படத்தில் நாயகியாக நடிக்க கேட்டுள்ளனர். அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் பொங்கல் முடிந்த பின்னர் துவங்கும் என கூறப்படுகின்றது.