ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும்பலர் நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தற்போது மலேஷியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த பல நாட்களுக்கு முன் சென்னை ஏர்போர்ட்டில் கபாலி படத்தின் ஷூட்டிங் நடந்தது. படத்தில் ரஜினியும், தன்ஷிகாவும் கலந்து கொண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் சில நிமிட பாடல் வரிகளும், வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. இது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் நடிக்கும் கலையரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: யாரும் தயவு செய்து கபாலி பாடல்களை பகிர வேண்டாம். இதனை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குங்கள் என கூறியுள்ளார்.