ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தோர், அவெஞ்சர்ஸ் படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். இவர் தனது அடுத்த படமான “ஹார்ட் ஆப் த சீ” படத்திற்காக ஐ விக்ரமை போல் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார். தோர் கதாபாத்திரத்திற்காக இவர் தனது உடல் எடையை அதிகரித்து நடித்துள்ளார். தற்போது இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடிக்கின்றார். எடை குறைப்பு மட்டுமல்லாமல், நீண்ட முடியுடன் நோய் வாய் பட்டவராக காணப்படுகின்றார்.
1820ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு திரைப்படம் தயாராகி வருகிறது. கடலில் பயணம் போகும் இவர்களின் கப்பலை ஒரு ராட்சத சுறா தாக்கி கப்பல் சிதிலமடைகிறது. அதைத் தொடர்ந்து 90 நாட்கள் எப்படி உயிர் தப்பி பிழைக்கின்றார் என்பதே கதையின் கரு. உலகம் முழுவதும் பல நடிகர் நடிகையர் தங்கள் கதாபாத்திரங்களுக்காக அவ்வவ்போது தங்கள் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தோர் நடிகரும் இணைந்துள்ளார்.