ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'இது என்ன மாயம்' வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. படத்தின் விளம்பரத்தைப் பார்க்கும் போது இது எதோ மேஜிக் சம்பந்தப்பட்ட படமாகவே தெரிந்தது. ஆனால், படத்தில் முழுக்க முழுக்க காதலைத்தான் 'மாயம்' என்று சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் விஜய்.
“இந்தப் படம் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பிரிந்து போன காதலியைக் கண்டிப்பாக நினைக்க வைக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை ரசனையான காதலைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறோம். ஆனால், விளம்பரங்களில் இது வேறு மாதிரியான படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் சொல்கிறார்கள். அது தயாரிப்பாளரின் விருப்பம், நாளை முதல் இது காதல் படம்தான் என்று புரியுமளவிற்கு புதிய டிரைலரை வெளியிட உள்ளோம்.
ஐந்தாறு வருடங்கள் கழித்து பிரிந்து போன தன் காதலியை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் நாயகனுக்குக் கிடைக்கிறது. காதலர்களாக இருந்தவர்கள் ஏன் பிரிந்தார்கள், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா என்பதைத்தான் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் காதலைப் பிடிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்,” என்கிறார் இயக்குனர் விஜய்.
வெவ்வேறு பண்பலை வானொலிகளில் ஆர்.ஜேக்களாக பணி புரியும், ஆர்.ஜே. பாலாஜி, பாலாஜி, அஜய் இந்தப் படத்தில் நண்பர்களாக இணைந்து நடித்துள்ளார்களாம். உள்ளத்தை நெகிழ வைக்கும் காதல் படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது என்று யோசிப்பவர்களுக்கு இந்தப் படம் ஒரு 'மேஜிக்'கைத் தரும் என்கிறார் இயக்குனர்.