மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நிக் ஆர்ட்ஸ் சக்கரவரத்தியின் தயாரிப்பில் விஜய்சந்தரின் இயக்கத்தில் சிம்பு ஹன்சிகா நடிப்பில் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் வாலு. அந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் சொன்னபடி தீபாவளிக்கு வாலு படம் ரிலீஸ் ஆகவில்லை. பிறகு 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும், அதன் பிறகு 2014 ஆம் வருடப் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், கடைசியாக 2015 ஆம் வருடப் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டது. 2015 பொங்கலுக்கு வரவில்லை என்றதும், பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்று சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை.
பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களிலும் கூட அவ்வப்போது பல தேதிகளை அறிவித்துக்கொண்டே வந்தனர். கடைசியாக ஜூலை 3 அன்று எப்படியும் வாலு படத்தை ரிலீஸ் செய்துவிடுவோம் என்று டி.ராஜேந்தர் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கு உறுதி கூறப்பட்டது.
இந்நிலையில் வாலு படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 17 என இறுதி செய்யப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டாலும் வாலு படம் இன்னும் முழுமையடையவில்லை என்பதே லேட்டஸ்ட் நிலவரம். தாறுமாறு என்ற பாடல் காட்சி இன்னும் எடுக்கப்படாமல் இருக்கிறது. மானாட மயிலாட புகழ் சாண்டியின் நடன அமைப்பில் நாளை முதல் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. ஜூலை 4 வரை படப்பிடிப்ப நடைபெறுகிறது.