ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வீரம் படத்திற்கு பிறகு, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் அஜித் 56ல தல 56 என்ற பெயரில் படம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வௌியாகி வருகின்றன. அஜித் உடன் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். கூடவே அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் துவங்கியது. முதற்கட்டமாக அஜித்-லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் இப்படத்தில் டாக்சி டிரைவராக நடிப்பதாகவும், கிட்டத்தட்ட ரஜினி நடிப்பில் வௌியான பாட்ஷா டைப் கதை என்றும் தகவல்கள் வௌியாகின.
இந்தநிலையில் அஜித், டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடிக்கவில்லை, ஸ்ருதிஹாசன் தான் டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடிக்கிறார் என தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன. முதற்கட்ட படப்பிடிப்பில் லட்சுமி மேனன் கலந்து கொண்ட நிலையில், இப்போது ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் ஸ்ருதி, டாக்ஸி டிரைவராக நடிக்கிறாராம். கோல்கட்டா, சென்னை என இரண்டு விதமான சூழலில் இப்படத்தின் கதை நகருவதாக கூறப்படுகிறது. வீரம் படத்தில் கொஞ்சம் கிராமத்து சாயலில் நடித்த அஜித், இப்படத்தில் முழுக்க முழுக்க சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கிறாராம்.