ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷயம்' திரைப்படம், அதன் பின் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன், ஸ்ரேயா ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக 'சிவாஜி' படத்தில் நடித்த ஸ்ரேயா, இரண்டு பெண்களுக்கு அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ், தெலுங்கில் ஒரு சில வருடங்களுக்கு முன்பாக முன்னணி ஹீரோயினாக இருந்த ஸ்ரேயா அதற்குள்ளாக அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளாரே என பேசி வருகின்றனர். த்ரிஷயம் படத்தின் முதல் பார்வை புகைப்படத்தில் ஸ்ரேயாவைப் பார்த்தால் அம்மா மாதிரியாகவா தெரிகிறது என்பதை நீங்களே பார்த்து யூகித்துக் கொள்ளுங்கள்.