ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் வளர்ந்து வரும் முன்னணி நடிகை சோனம் கபூர். ராஞ்சனா, டோலி கி டோலி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சோனம், நடிப்பு மட்டுமல்லாது பேஷன் டிசைனிங், விளம்பரம் என்று அசத்தி கொண்டிருக்கிறார். தன் சினிமா கேரியர் சிறப்பாக சென்று கொண்டிருந்தாலும் அவருக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனம், தான் சினிமா பக்கம் திரும்பியதால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும், இதனால் டிகிரியை முடிக்கவில்லை என்ற கவலைப்பட்டுள்ளார். மேலும் இந்தாண்டு இறுதிக்குள் தனது டிகிரியை முடித்து விட எண்ணியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.