ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அனுஷ்கா, அஜீத்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். அப்போது அஜீத்திடம் கற்றுக் கொண்ட மூன்று விஷயங்கள். ஒன்று மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது, இரண்டு பிரியாணி சமையல், மூன்றாவது தனக்காக உழைப்பவர்களுக்கு உதவுவது. என்னை அறிந்தால் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் தன் வீடு மற்றும் தோட்டப்பணியாளர்களுக்கு கிழக்கு கடற்கரைசாலையில் அடுக்குமாடி வீடு கட்டிக் கொடுத்தார்.
இப்போது அதே பாணியில் அனுஷ்கா தன் வீட்டு பணியாளர்களுக்கு ஐதராபத்தின் புறநகர் பகுதியில் வீடு கட்டி வருகிறார். "சாதாரண யோகா டீச்சராக இருந்து இன்றைக்கு நான் இவ்வளவு வசதியோட இருக்கேன்னா அதுக்கு காரணம் நான் மட்டுமில்லை என்னை சுற்றி இருக்கிறவங்களும், எனக்காக இரவு பகலா உழைத்தவர்களும்தான். அவர்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தேன். அதுதான் இது. நடிகை என்பதை தாண்டி நான் எல்லா உணர்வுகளும் மிக்க சராசரி பெண்" என்கிறார் அனுஷ்கா.