ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் சில வருடங்களுக்கு முன் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த தமன்னா, பின்னர் ஒரு பிரச்னையால் தமிழ்த் திரையுலகை விட்டே கொஞ்ச காலம் விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அஜித் ஜோடியாக 'வீரம்' படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். தற்போது தமிழில், ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் 'பாகுபலி' படத்திலும் நடித்து வருகிறார்.
'பாகுபலி' படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்தப் படம் இந்தியத் திரையுலகத்தின் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்தும் என ரஜினிகாந்த் கூட சமீபத்தில் ஒரு விழாவில் பேசியிருந்தார். அனுஷ்கா, ராணா டகுபதி, பிரபாஸ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் இப்படம் சம்பந்தமான ஒவ்வொரு புகைப்படங்களாக ராஜமௌலி வெளியிட்டு வருகிறார். இதற்கு முன் பிரபாஸ், ராணா டகுபதி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நேற்று படத்தில் அவந்திகாவாக நடிக்கும் தமன்னாவின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் தமன்னாவின் அழகைப் பார்த்து பிரமித்துப் போயுள்ளனர். வானத்திலிருந்து அப்படியே ஒரு தேவதை இறங்கி வருவதைப் போன்ற தோற்றத்தில் அந்தப் புகைப்படம் இடம் பெற்றிருந்த்து. தமன்னாவின் முகப்பொலிவும், ஆடையும் அவ்வளவு அட்டகாசமாக இருந்தது. நேற்றே சமூக வலைத்தளங்களில் அந்தப் புகைப்படம் மிக அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. நேற்று எத்தனை பேரை தூங்க விடாமல் தமன்னா தவிக்க வைத்தாரோ....