ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'சைவம்' படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.எல்.விஜய். மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இப்படத்திற்கு தற்போது இது என்ன மாயம் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
கேரளாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இது என்ன மாயம் படத்தின் விளம்பர போஸ்டரில் விக்ரம் பிரபுவின் தோற்றத்தை பார்க்கும்போது இதில் அவர் ஒரு மேஜிக் மேனாக நடிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை வைத்து, இப்படம் மேஜிக் சம்பந்தப்பட்ட கதையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாக ஏ.எல்.விஜய் இயக்கும் படங்கள் ஏதாவது ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்ட கதையாகவே இருக்கும். இது என்ன மாயம் படத்தின் கதை எங்கிரந்து சுடப்பட்டது?நெய்ல் பர்கர் இயக்கத்தில் 2006 அம் ஆண்டு வெளியான த இல்லூஷனிஸ்ட் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பிதான் இது என்ன மாயம் என்ற தகவல் காதில் விழுகிறது.