ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான வெங்கட்பிரபு, தனுஷ் என்று பெயரை மாற்றிக் கொண்டு 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகராக அறிமுகமான இரண்டே ஆண்டில், அதாவது 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மருமகனாக மாறினார். ரஜினியின் மருமகன் என்பதை மறந்து தனுஷ் என்ற நடிகராகவே ரசிகர்கள் அவரைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் தன் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துவரும் தனுஷ், தற்போது அனேகன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம், ரான்ஜ்னா படத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் நடித்து வரும் ஷமிதாப் படத்தையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதி செய்கிறார்.
ஷமிதாப் படத்தின் இயக்குநரான பால்கி, தனுஷை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்.... காதல் கொண்டேன் படத்திலிருந்தே தனுஷின் தீவிர ரசிகராம் பால்கி. அதோடு, நடிகர் தனுஷ் தனித்துவமான நடிகர் என்றும், வேறெந்த நடிகரின் பிரதிபலிப்பும் அவருடைய நடிப்பில் இல்லை எனவும் புகழ்ந்திருக்கிறார் அவர். ஷமிதாப் படத்தில் தனுஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்ததற்கான காரணம் படம் பார்க்கும்போது ரசிகர்களுக்குத் தெரிய வரும் என்றும் கூறியிருக்கிறார் பால்கி.