''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
2014ம் ஆண்டில் பாலிவுட் நடிகர்களின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார் சல்மான்கான். அவர் கடைசியாக ஒரு படத்துக்கு 60 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அமீர்கானின் சம்பளம் 45 கோடியாகவும், ஷாருக்கான் சம்பளம் 35 கோடியாகவும் அதிகரித்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் சம்பளம் 25 கோடி.
அடுத்த வரிசையில் வருகிறார் ஜான் ஆபிரகாம். ஒரு படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்குகிறார். ரன்பீர் கபூர் வாங்கும் சம்பளம் 15 கோடி, அஜய் தேவ்கானுக்கு 18 கோடி. அமிதாப்பச்சன் புகழின் உச்சியில் இருந்தபோது வாங்கிய சம்பளம் அதிகபட்சம் 6 கோடி. தற்போது 10 கோடி வாங்குகிறார்.
நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குகிறவர் ஐஸ்வர்யராய் 20 கோடி வாங்கினார். திருமணத்துக்கு பிறகு நடிக்கும் படங்களுக்கு 10 கோடி கேட்பதாக கூறப்படுகிறது. இவர் தவிர கரீனா கபூர் 12 கோடியும், பிரியங்கா சோப்ரா 9 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள். 2013ம் ஆண்டு இவர்கள் வாங்கிய சம்பளத்தோடு ஒப்பிடும்போது 30 சதவிகிதம் சம்பளம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.