ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆலியா பட். முன்னணி ஹீரோக்கள் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகை. கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறவர். அப்படிப்பட்ட ஆலியா ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
அந்த குறும்படத்தின் பெயர் கோயிங் ஹோம். விஷால் பாகல் என்பவர் இயக்கி இருக்கிறார். இது பெண்களை பெருமை படுத்தும் படமாக இருக்கிறது. ஜந்தரை நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தில் ஆலியா நள்ளிரவில் காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார். நடுவழியில் கார் பிரேக் டவுனாகி விடுகிறது. அப்போது அந்த வழியாக நான்கைந்து இளைஞர்கள் ஒரு காரில் வருகிறார்கள். அவர்கள் ஆலியாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். காரை சரிசெய்ய முடியாததால் துணிச்சலுடன் அவர்கள் காரிலேயே சென்று வீட்டில் இறங்குகிறார்.
ஆலியாவின் அன்புக்கு முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடிவில்லை. அனைவரையும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி வீட்டுக்குச் செல்கிறார். "பெண்கள் விரும்பும் உலகத்தை நாம் தரலாமே" என்ற வாசகத்துடன் குறும்படம் முடிகிறது. தற்போது யூ டியூப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படம்தான் இப்போது வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.