ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒருகாலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரேகா. தற்போது தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இந்திரா குமார் இயக்கும், ''சூப்பர் நானி'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சர்மான் ஜோஷி, அனுபம் கெர், ரன்தீர் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரேகா, இப்படத்தில் பார்தி பாத்தியா எனும் ரோலிலும், அவரது பேரனாக ஷர்மான் ஜோசியும் நடித்துள்ளனர். இப்படம் திரைக்கு வரும்போது பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்ல இருக்கிறது. மேலும் இப்படத்தில் பெண்களின் வலிமை பற்றியும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம் படத்தில் சந்தோஷம், கண்ணீர் என்று அனைத்து விதமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், ரேகாவின் வெற்றிப்பட வரிசையில், இந்தப்படமும் நிச்சயம் இடம்பெறும் என இப்போதே கூறி வருகின்றனர்.