Advertisement

ரேகா

Birthday
10 Oct 1954 (Age )

நடிகர் ஜெமினி கணேசன்- தெலுங்கு நடிகை புஷ்பவள்ளி தம்பதியின் மகளான ரேகா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 1966ம் ஆண்டு தெலுங்கில் ரங்குலா ரத்னா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரேகா, 1969ம் ஆண்டு கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1970 களில் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ரேகா, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். பின்னர், 1980களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 1990களில் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் உள்ளிட்ட ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் நடித்தார். பல தேசிய விருதுகளை பெற்ற ரேகா, 2010ல் பத்மஸ்ரீ விருதும், 4 முறை இந்திய அரசின் விருதையும் பெற்றுள்ளார். 2012ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்ட ரேகா சில காலம் நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்தார். தற்போது சூப்பர் நானி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.