விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்தாலும் தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு வந்தாலும், ஸ்ருதிஹாசன் அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாராம். ஒரு படத்தில் நாயகியாக நடிப்பதென்றால் அதற்கு ஏறக்குறைய 50 நாட்கள் கால்ஷீட் தரவேண்டும். ஆனால், ஒரு பாடலுக்கு நடனமென்றால் ஒரு சில நாட்களிலேயே முடித்து விடுகிறார்கள். அதே சமயம், ஒரு படத்திற்குத் தரும் சம்பளத்தை விட பாதிக்கும் மேல் தந்து விடுகிறார்கள். அதனால் பெரிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவதில் தவறில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.
சமீபத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் 'ஆகாடு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் தற்போது ஹிந்தியில் அர்ஜுன் கபூர் நடிக்கும் 'தீவர்' ஹிந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறாராம். இந்த அர்ஜுன் கபூர் யார் தெரியுமா ? ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரின் முதல் மனைவியின் மகன். இந்த அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவியைப் பற்றி சொல்லும் போது கூட அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி, அவ்வளவுதான் என்று சொல்வாராம். தற்போது மகன் அர்ஜுன் கபூரை, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஆக்க வேண்டும் என்று அவருடைய அப்பா போனி கபூர் முடிவெடுத்திருக்கிறாராம். இதற்கு முன் “கன் டே, 2 ஸ்டேட்ஸ்” ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் அர்ஜுன் கபூர்.
இந்த 'தீவர்' படம் தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'கில்லி' படத்தின் ரீமேக்தான். தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து, தற்போது ஹிந்தியில் தயாராகி வருகிறது. தமிழில் பிரகாஷ்ராஜ் நடித்த கேரக்டரில் 'அஞ்சான்' படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பாய் நடிக்கிறார். ஸ்ருதிஹாசனின் ஒரு பாடல் நடனம் படத்தில் ஹைலைட்டாக இருக்குமாம்.