ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களுக்கெல்லாம் 30 வயதை தாண்டி விட்டதால் 23 வயதான ஆலியா பட்டின் காட்டில்தான் இப்போது அடைமழை. கான் நடிகர்களில் இருந்து கபூர் நடிகர் வரை ஆலியாவுடன் நடிக்க விரும்புகிறார்கள். காரணம் படத்தில் கண்டிப்பாக ஒரு லிப் லாக் கிஸ் இருக்கும்.
அறிமுகமான ஸ்டூடண்ட் ஆப் தி ஈயர் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்தார். பிறகு வந்த ஹைவே படத்தில் ரன்தீப் ஹோடாவுடன் நடித்தார், சமீபத்தில் வெளியான 2 ஸ்டேட்ஸ் படத்தில் அர்ஜுன் கபூருடன் நடித்தார். தற்போது நடித்து வரும் ஹம்டி கர்மா துல்கானியா படத்தில் வருண் தவானுடன் நடித்து வருகிறார்.
அடுத்து அவர் ரன்பீர் கபூருடன் நடிக்க இருக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். கரண் ஜோகர் தயாரிக்கிறார். "ரன்பீர் கபூரும், ஆலியாவும் மிக பொருத்தமான ஜோடிகள். இருவருக்கும் பொருந்தக்கூடிய அருமையான கதை தேர்வாகி உள்ளது. பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படம் 2016ம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதி ரிலீசாகும்" என்று தனது இணையதள பக்கத்தில் இயக்குனரும், தயாரிப்பாளரும் தெரிவித்திருக்கிறார்கள்.