தாமு ஏன் வெங்கடேஷ் பட்டுடன் வரவில்லை?: புதிய தகவல் | கருப்பு பணத்தை மாற்றுகிறேனா? விமர்சனத்திற்கு பாலா பதில் | 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர் | கங்கனா ரணாவத் சொத்து மதிப்பு எவ்வளவு? | ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ! | காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? |
பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் குல்சார். அடிப்படையில் உருது கவிஞரான இவர் ஏராளமான ஹிந்தி படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 1963ம் ஆண்டு 'பண்டினி' என்ற படத்தில் இசை அமைப்பாளர் பர்மன் இவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆயிரக்கணக்கான பாடல்களை குல்சார் எழுதி உள்ளார். இதுதவிர ஏராளமான புத்தகங்களையும் எழுதி உள்ளார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார். இதுதவிர பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார். சிறந்த புத்தகங்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு 2023ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி குல்சாருக்கு பத்மவிபூஷன், மற்றும் பாரத ரத்னா விருது மட்டுமே பாக்கி உள்ளது.