ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கு தொலைகாட்சிகளில் பிரபலமான லக்ஷ்மி மஞ்சு திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்து வருகின்றார். இந்நிலையில் மீண்டும் லக்ஷ்மி மஞ்சு சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். மேமு சைதம் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி மூலம் வரும் வருவாயில் சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் புரமோஷன் வேலைகளையும் லக்ஷ்மி மஞ்சு துவக்கிவிட்டார். லக்ஷ்மியின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ராகுல் ப்ரீத்தி சிங் இந்நிகழ்ச்சியின் புரமோஷனில் ஒரு பகுதியாக காய்கறி விற்றுள்ளார். மஞ்சீரா, வணிக வளாகத்தில் உள்ள கேபிஎஸ்பி காய்கறிகடையில் மேமு சைதம் நிகழ்ச்சிக்காக காய்கறிகள் விற்பனை செய்யப்போவதாகவும் தன்னிடம் காய்கறி வாங்க வருமாறும் ராகுல் ப்ரீத்தி சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.