ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு, இந்தி என, அனைத்து மொழி திரைப்பட ரசிகர்களின் மனதுக்குள், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும், அழகுச் சிலை, தமன்னா. படபடப்பான பேச்சுக்கும், பளீரென்ற புன்னகைக்கும் சொந்தக்காரரான தமன்னா, "தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்.
* தீபாவளி
எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை, தீபாவளி. குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுவதில், அப்படி ஒரு சந்தோஷம். தொடர் படப்பிடிப்புகளால், கடந்த சில ஆண்டுகளாக, இந்த சந்தோஷம் கிடைக்கவில்லை. படப்பிடிப்புகளில் தான் கொண்டாடினேன். இந்த ஆண்டு, மும்பையில் உள்ள, என் வீட்டில் தான், தீபாவளியை கொண்டாடப் போகிறேன். எங்களின் வீட்டுக்கு அருகில், மகாலெட்சுமி கோவில் உள்ளது. தீபாவளிக்கு காலையில் அங்கே சென்று, மனம் உருக, பிரார்த்திக்க போகிறேன்.
* பிடித்த ஸ்வீட்
மில்க் ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும். ஆனாலும், அதை அதிகமா சாப்பிட முடியாது. தீபாவளி வந்தாலே எனக்கு கொஞ்சம் பயம். காரணம், பட்டாசு சத்தம். பட்டாசு சத்தத்தை கேட்டாலே, எனக்கு அலர்ஜி. தயவு செய்து நீங்க கூட அதிகமா வெடி வெடிக்காதீங்க. இந்த வருஷம் தீபாவளி எல்லாருக்கும் நல்லபடியா அமையணும்.
* தமிழ் ரசிகர்கள்
மீண்டும் இந்தி படங்களில் "பிசியாகி விட்டதால், என்னுடைய தமிழ் ரசிகர்களை ரொம்பவே "மிஸ் பண்றேன். நல்ல கதைக்காக காத்திருக்கேன். வாய்ப்பு வரும்போது மீண்டும் தமிழில் கலக்குவேன்.
* பட்டுப் புடவை
எனக்கு பட்டுப்புடவை ரொம்ப பிடிக்கும். பட்டுப் புடவை மீது எனக்கு பைத்தியம் என்றே, கூறலாம்.
* பிடித்த கேரக்டர்
இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும், அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லை. இயக்குனர்கள் எந்த மாதிரி நடிக்க வேண்டும் என, கூறுகிறார்களோ, அப்படி நடிக்க வேண்டும் என்ற, ஒரே ஆசை மட்டும் தான் உள்ளது.
* அடுத்த படம்
"ஏன் என்றால் காதல் என்பேன் என்ற படம், தமிழ், தெலுங்கு மொழிகளில், விரைவில் வெளிவரப் போகிறது. இந்த படத்தில், புது தமன்னாவை பார்க்க முடியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், எப்பவும் வீட்டில் தான் இருப்பேன். அரட்டை, ஷாப்பிங் போன்ற பழக்கம் இல்லை.