ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி | நடிகையை கடத்தி துன்புறுத்த திலீப் தான் பணம் கொடுத்தார் : முதல் குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு பேச்சு | குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! |
'ஏனோ வானிலை மாறுதே... மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே... கண்ணெல்லாம் நீயே தான் இருக்கின்றாய்'... என, அலை கடலின் அலைகளாய் காதலை அள்ளி வீசிய கேரளத்து தேவதை... கொஞ்சிப் பேசும் கிளிகளே இவர் அழகில் மோகம் கொண்டு கெஞ்சிப் பேசும்... மஞ்சிமா மோகன் நம் நெஞ்சமெல்லாம் இனிக்க கொஞ்சிப் பேசுகிறார்...
சத்ரியன்.?
திருச்சி தான் கதைக்களம், அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன். உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். மேக்கப், ஆரவாரம் இல்லாத எளிமையான கேரக்டர்.
உங்கள் நடிப்பு.?
இந்த படத்திற்காக நான் வேலை பார்த்த நாட்கள் குறைவு. ஆனால், நிறைய ஹோம் வொர்க் பண்ணி, என்னோட பெஸ்ட் கொடுத்திருக்கேன்.
மேக்கப் இல்லாமல்...?
எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்... கண்ணுக்கு மை, நெற்றியில் பொட்டு, சிம்பிள் டிரஸிங் ரொம்பவே பிடிச்சது.
விக்ரம் பிரபு.?
நல்ல மனிதர், படத்தில் ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு ஆளாக வருவார். சினிமா குறித்து பல விஷயங்கள் தெரிந்தவர்.
சிவாஜி வீட்டு சாப்பாடு?
ஹூம்... நானும் சாப்பிட்டேன், அவங்க வீட்டில் எல்லோரும் நல்லா பழகுவாங்க.
ரசிகர்கள்...?
ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லக் கூட தெரியாது, எனக்கு கூச்சம் அதிகம். இப்போ தான் கொஞ்சம் ஹலோ சொல்றேன்... பக்கத்துவீட்டு பெண் கேரக்டர் இல்லை; கிளாமர் பண்ணுங்கண்ணு சொல்றாங்க.
உங்கள் படிப்பு.?
நான் பி.எஸ்சி., கணிதம் படிச்சிருக்கேன். நடிப்பில் பிசியாக இருப்பதால் மேற்படிப்பில் கவனம் செலுத்தமுடியல.
அப்பா போட்டோகிராபி பிரியர், நீங்கள்...?
சின்ன வயசில் இருந்தே எனக்கு நடிப்பு தான் ஆர்வம்.
மடோனா - மஞ்சிமா போட்டி.?
மடோனா என் தோழி தான்... ஆனால், அனுபமா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களும் போட்டிக்கு இருக்காங்களே... எல்லாம் ஆரோக்கியமான போட்டி தான்.
சிம்புவுடன் உள்ள நட்பு ?
இப்பவும் எங்களோட நட்பு அப்டியே இருக்கே. பழக ரொம்ப இனிமையான மனிதர். எனக்கு நிறைய வாழ்த்துக்களை சொல்லிருக்கார்.
நடிப்பை தவிர வேறு என்ன தெரியும்?
பரதம் முறைப்படி கற்றிருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே பரதம் ஆடுகிறேன்.
எடை குறைக்கும் முயற்சி.?
கொஞ்சம் குறைத்திருக்கேன், இது போதும் என்று நினைக்கிறேன்.
தமிழ் ரசிகர்கள் பற்றி ?
ரொம்ப அருமையானவர்கள். எங்க பார்த்தாலும் அன்போடு பேசுறாங்க, அவங்க வீட்டு பெண் போல பார்க்கிறாங்க, இளம் வயதினர் மட்டும் இல்லை, குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அன்பா பார்ப்பதும் தமிழ் நாட்டில் தான்.
யாருடைய ரசிகை நீங்கள் ?
நான் விஜய் ரசிகை.
நடிக்க விரும்பும் இயக்குனர்.?
மீண்டும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கணும். அப்புறம் மணிரத்தினம், ராஜமௌலி அட்லி என பெரிய லிஸ்ட் இருக்கு...