மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மெகா குடும்ப நடிகர்களில் ஒருவரான சாய் தரண் தேஜ் நடிப்பில், இந்த வருடம் சுப்ரீம், திக்கா என இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. தற்போது, இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். படப்பிடிப்பு தளத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் சாய் தரணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் பஸ்ட் லுக் என வெளியிட்டுள்ளார். சாய் தரண் தேஜின் வாயை மூடிய மகிழ்ச்சியில் ரகுல் ப்ரீத்தி சிங்கும் அவரது ஸ்டைலிஷ்ட் நீரஜ்கொன்னா சாய் தரணின் தலையை பிடித்தபடியும் அவர்களது பிடியில் சாய் தரண் சிக்கி தவிப்பது போன்று இருக்கும் புகைப்படத்தை ரகுல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சாய் தரண் மும்பை சென்று தனது சிகை அலங்காரத்தை மாற்றி வந்துள்ளார்.