ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாகுபலி நாயகன் பிரபாஸின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான டார்லிங் படத்தின் உதவி இயக்குனர் சந்திரமோகன் இயக்குனராக உயரவிருக்கும் படத்தில் சர்வானந்த் ஹீரோவாக நடிக்கின்றார். சர்வானந்த போலீஸாக நடிக்கவிருக்கும் சந்திரமோகனின் படத்தை பிரபல தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கின்றார். நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க அக்ஷா ஒப்பந்தமாகியுள்ளார். பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அக்ஷா சர்வானந்தின் ஆக்ஷன் படத்தில் இடம் பிடித்துள்ளார். அண்மையில் டெஸ்ட் சூடில் பங்கெடுத்த அக்ஷா, இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாக பொருந்தியிருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.