மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் ஆசிப் அலிக்கு இந்த வருடத்திய முதல் ரிலீஸாக விரைவில் வெளிவர இருக்கும் படம் தான் இது தாண்டா போலீஸ்'. முதலில் இந்தப்படத்திற்கு 'தி காப் இன் ட்ரைவர் ஆன் டூட்டி' (The cop in Driver on Duty) என ஆங்கிலத்தில் முழு நீளத்திற்கு பெயர் வைத்திருந்தார்கள். அப்புறம் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, சமீபத்தில் மகேஷ்பாபுவின் டப்பிங் படம் ஒன்றுக்கு 'இது தாண்டா போலீஸ் என பெயர் வைத்ததை பார்த்து, தற்போது தங்களது படத்திற்கும் அதே பெயரையே வைத்துவிட்டார்கள். இந்தப்படத்தில் கண்டிப்பும் கறாருமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் சீனியர் நடிகை அபிராமி.
இதற்காக சுரேஷ்கோபி, மம்முட்டி ஆகியோர் போலீஸ் வேடங்களில் நடித்த படங்களை டிவிடியில் போட்டுப்பார்த்து தனது கேரக்டரை இம்ப்ரூவ் செய்திருக்கிறாராம் அபிராமி..
இவர் தலைமையிலான மகளிர் ஸ்டேஷனில் தான் ஆசிப் அலி ஜீப் ட்ரைவராக நடித்திருக்கிறார். அந்த ஸ்டேஷனில் உள்ள மொத்த பெண் போலீஸாரிடமும் ஒரே ஆண் போலீசான ஆசிப் அலி மாட்டிக்கொண்டு தவிப்பதை காமெடி ப்ளஸ் மைல்டான ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார்களாம். படத்தில் ஆசிப் அலிக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். மனோஜ் பலோடன் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது அபிராமிக்காகத்தான் இந்தப்பெயரை டைட்டிலாக வைத்திருப்பார்களோ என்றே நினைக்க தோன்றுகிறது.