ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேரம் படத்தை அடுத்து தமிழில் நிவின்பாலி நடித்துள்ள படம் ரிச்சி. 2014-ல் கன்னடத்தில் வெளியான உளிதவரு கண்டந்தே என்ற படத்தில் ரீமேக்கான இந்த படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ரேக் பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் இசை விழா நடக்க உள்ளது.
மேலும், தற்போது அனைத்து கட்ட பணிகளும் நடந்து முடிந்துவிட்ட ரிச்சி படத்தை தணிக்கைக் குழு பார்வைக்கு அனுப்பியுள்ளனர். இன்னும் சிலதினங்களில் படத்திற்கான சான்றிதழ் என்னவென்று தெரிந்து விடுமாம். இப்படத்தை தீபாவளிக்கு பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதோடு, இதுவரை சாப்ட்டான வேடங்களில் நடித்து வந்துள்ள நிவின்பாலி, முதன்முறையாக இந்த படத்தில் தூத்துக்குடி ரவுடியாக நடித் துள்ளாராம். அதற்காக தனது உடல் எடையை குறைத்து தாடி வைத்து நடித்திருக்கும் நிவின்பாலி, சண்டை காட்சிகளில் நல்ல ஸ்கோர் பண்ணியிருப்பதாக சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள நிவின்பாலி, இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து மலையாளத்திலும் ஆக்சன் கதைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறாராம்.