ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அட்டகத்தி படம் தொடங்கி பல வெற்றிப் படங்களை தயரித்தவர் சி.வி.குமார், இப்போது இயக்குநராக களமிறங்கி உள்ள படம் மாயவன். தெலுங்கு ஹீரோவான சந்தீப் கிஷன், லாவண்யா த்ரிபாதி கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள 'மாயவன்' படத்தை இம்மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
விஐபி-2, பொதுவாக எம்மனசு தங்கம் என இரண்டு பெரிய படங்கள் இந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆவதால், 'மாயவன்' படத்தின் ரிலீஸை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்த தகவலை படக்குழுவினரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
'மாயவன்' படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை கோபி அமர்நாத் கவனித்துள்ளார். சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, அபினேஷ் இளங்கோவன் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படம் இது!
சி.வி.குமார் எடுக்கும் படங்களை வழக்கமாக அபினேஷ் இளங்கோவன்தான் வாங்கி வெளியிடுவார். தற்போது ஆரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. மாயவன் வெளியாக உள்ள அதே நாளில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்' திரைப்படமும் வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டாலும், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.