ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் - கவுதம் மேனன் முதன்முறையாக இணைந்த படம் ‛என்னை அறிந்தால்'. அஜித் போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலிலேயே நடித்திருந்தார். அஜித்துடன் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. கடந்தாண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. என்னை அறிந்தால் வெளிவந்த சமயத்திலேயே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என பேச்சு எழுந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் கவுதம் மேனன், மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது, என்னை அறிந்தால் 2 பற்றிய தகவலை வெளியிட்டார். அவர் பேசும்போது... ‛‛என்னை அறிந்தால் படத்தின் 2ம் பாகம் குறித்து விரைவில் அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறினார்.
கவுதம் மேனனின் இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.