ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கபாலி திரைப்படத்தின் டீசர் நாளுக்கு நாள் பல புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரைப்பட சாதனைகளையும், இந்தியத் திரைப்பட சாதனைகளையும் தகர்த்தெறிந்து ஹாலிவுட் திரைப்படங்களின் சாதனையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது அனைத்து திரையுலகத்தினரும் ரஜினிக்கு உள்ள பெயரைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயுள்ளார்கள்.
நேற்று இந்தியத் திரைப்பட டீசர்களின் லைக்குகளில் முதலிடத்தைப் பிடித்திருந்த தெறி டீசர் சாதனையை கபாலி டீசர் முறியடித்தது. உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர்களில் கபாலி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இன்னும் சில மணி நேரங்களில் உலக அளவில் கபாலி டீசர் இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போகிறது.
உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற இரண்டாவது டீசராக ரக் ஒன் - எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி 3 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளுடன் உள்ளது. இந்த சாதனையை முறியடிக்க கபாலி டீசருக்கு இன்னும் 3000 லைக்குகள்தான் தேவைப்படுகிறது. அது அடுத்த சில மணி நேரங்களில் நடக்க வாய்ப்புள்ளது.
கபாலி டீசர் இவ்வளவு சாதனைகளையும் வெறும் ஆறே நாட்களில் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.