ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யாரென்று தெரிகிறதா..? என்பது போல பல்ராம் நாயுடு கதாபாத்திரம் ஞாபம் இருக்கிறதா.? 'தசாவதாரம்' படத்தில் கமல் நடித்த வேடங்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவிலிருந்து வரும் விஞ்ஞானி கோவிந்த் கமலை விசாரிக்கும் அதிகாரியாக இந்த பல்ராம்நாயுடு ரோல் அமைந்திருந்தது. அதோடு காமெடி கலந்த ரோலில் கமல் நடித்த இந்த வேடம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக அந்தகேரக்டரில் அவர் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது கமல், ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் 'பல்ராம் நாயுடு' சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. அதாவது தசாவதாரம் படத்தில் கமலின் ரோலை மட்டும் காண்பித்தார்கள். இப்போது அந்த பல்ராம் நாயுடு ரோலையே ஒரு முழுப்படமாக உருவாக்கி இருக்கிறார்களாம். இதில் பல்ராம் நாயுடுவாக கமலே நடிக்க, அவரது மகளாக ஸ்ருதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தை கமலுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரிக்கிறது.
இப்படத்தின் பூஜை நாளை(ஏப்.,29) நடிகர் சங்க வளாகத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. இதில் நடிகர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.