ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த நிவின் பாலியின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அவரை முன்னணி நடிகராக உயர்த்தி விட்டது. அதிலும் நிவின் பாலி நடித்த பிரேமம் படத்தின் வெற்றி கேரளாவையும் தாண்டி அவரது ரசிகர் கூட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடித்து வருகின்றார். பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் அதே வேடத்தில் தெலுங்கிலும் நடிக்கின்றார். மேலும் பிரேமம் படத்தில் புகழ்பெற்ற ஆசிரியை மலர் வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். மகன் நாக சைதன்யா நடித்து வரும் பிரேமம் படத்தைப் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நிவின் பாலியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் நாகார்ஜுனா கூறுகையில், கேரளாவில் இப்படம் இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றது. பிரேமம் படத்தை பார்த்த பின்னர் நாக சைதன்யாவிடம் இயக்குனர் சண்டூ மொண்டெடி சொல்வதை அப்படியே நடித்து கொடுத்து விடு என கூறியதாக தெரிவித்தார். தெலுங்கு ரசிகர்களுக்கென சில மாற்றங்கள் செய்துள்ளதாக நாகார்ஜுனா கூறியுள்ளார்.