ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெனாலிராமனைத் தொடர்ந்து வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் எலி. இந்த படத்தை யுவராஜ் தயாளன் இயக்கி வருகிறார். 1970களில் நடக்கும் கதையில் இப்படம் தயாராகிறது. அந்நியன் நாயகி சதா இப்படத்தில் ஒரு பாட்டுக்கு வடிவேலுவுடன் இணைந்து குத்தாட்டம் ஆடுகிறார். இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க தென்னிந்திய நடிகைகள் யாரும் ஒத்துக்கொள்ளாததால் இப்போது தெனாலிராமனில் நடித்த மீனாட்சி தீட்ஷித்தை போன்று ஒரு மும்பை நடிகையை நடிக்க வைக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடிவேலு சம்பந்தப்பட்ட பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் ஒரு தத்துவப்பாட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் இன்றைய நாட்டு நடப்புகளை சொல்லி, வாழ்க்கையின் யதார்த்தங்களையும் போதிக்கும் வகையில் பாடுகிறாராம் வடிவேலு.