ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம், விஜய், சூர்யா, விஷால் உட்பட பல ஹீரோக்கள் லயோலா காலேஜில் படித்தவர்கள். இவர்களில் விஷால் அங்கே விஸ்காம் படித்தவர். லயோலா காலேஜில் படித்த பல நடிகர்கள் சினிமாவில் முன்னணி நடிகரான பிறகு அந்த காலேஜ் பக்கம் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. விஷால் விதவிலக்கு. தான் படித்த கல்லூரிக்கு அடிக்கடி செல்வதோடு, தன்னுடைய பேராசிரியர்களுக்கு மரியாதை செய்யவும் அவர் தவறியதே இல்லையாம். சினிமாவில் தான் பெற்ற வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் இக்கல்லூரிக்கு முக்கியப் பங்குண்டு என்று அடிக்கடி பேட்டிகளில் சொல்வார் விஷால். அதோடு, அதை எப்போதும் நினைவிலும் வைத்துக் கொள்வார். அதனால்தான் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்த முதல்படமான பாண்டியநாடு படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவை கடந்த வருடம் லயோலா காலேஜில் நடத்தினார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அந்த சென்டிமென்ட் காரணமாகவோ என்னவோ, ஹரி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் பூஜை படத்தின் இசை வெளியீட்டுவிழாவையும் லயோலா கல்லூரியில் வைத்திருக்கிறார். நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர் படங்களைத் தொடர்ந்து விஷாலும், யுவனும் 7 முறையாக பூஜையில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்பது பூஜை படம் குறித்த உப தகவல்.