ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தான் டொவினோ தாமஸ். கடந்த 2016 வரை பெரிதும் ரசிகர்களை அவ்வளவாக கவராத இவர், கடந்த 2017ல் தொடர்ச்சியாக சில ஹிட் படங்களை கொடுத்து லைம்லைட்டுக்கு வந்தார்.
அதனால் தான் நடிகர் தனுஷ், மலையாளத்தில் தான் முதன்முதலாக தயாரித்த 'தரங்கம்' படத்தில் இவரை ஹீரோவாக்கினார். இவரை வைத்து 'மாரடோனா' என்கிற இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார். தவிர தமிழில் தனது மாரி-2'விலும் வில்லனாக்கி உள்ளார்.
இந்த டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2016 'குப்பி' என்கிற படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே சென்சாரில் சில பிரச்சனைகளை சந்தித்து பின்னர் ஒருவழியாக ரிலீசாகி, நல்ல படம் என விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்த சமயத்தில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது. அதில் டொவினோவுக்கு ஏகப்பட்ட வருத்தம் இருந்தது.
தற்போது இந்தப்படத்தை இந்தவாரம், மீண்டும் சில தியேட்டர்களில் மறு-ரிலீஸ் செய்துள்ளார்கள். டொவினோவுக்கு தற்போது மார்க்கெட் சூடுபிடித்துள்ளபடியால் தான், மீண்டும் அவரது படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள் என சொல்லப்படுகிறது.