ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ராஜமவுலியின் மகதீரா படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளை செய்தவர் கமலக்கண்ணன். அதைத்தொடர்ந்து பாகுபலி-2 படத்திலும் அவர்தான் விஎப்எக்ஸ் செய்திருந்தார். பாகுபலி-2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது கிராபிக்ஸ் தொழில் நுட்பமே முக்கிய காரணமாகியது. இதனால் உலக அளவில் கவனிக்கப்படும் விஎப்எக்ஸ் நிபுணராகி விட்டார் கமலக்கண்ணன்.
இந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்திற்கும் கமலக் கண்ணன்தான் விஎப்எக்ஸ் பணிகளை செய்து வருகிறார். முக்கியமாக பாகுபலி-2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததால், இன்னொரு பரிமாணத்தில் ஸ்பைடர் படத்திற்கான வேலைகளை ரஷ்யாவில் உள்ள ஒரு பிரமாண்ட ஸ்டுடியோவில் தொடங்கியிருக்கிறார் கமலக்கண்ணன்.