மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அடுத்தபடியாக கோரட்டாலா சிவா இயக்கும் பாரத் அனி நேனு என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்பைடர் படத்தில் அவர் நடித்து வந்தபோது இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதால் விரைவில் இந்த படத்தில் நடிக்கிறாராம் மகேஷ்பாபு.
மேலும், இந்த படத்தை தயாரிக்கும் டி.வி.வி.தனையா, 2018ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி பாரத் அனி நேனு படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக இப்போதே அறிவித்து விட்டார். ஒரு சாதாரண அரசியல் தொண்டன், பெரும் போராட்டத்திற்கு பிறகு முதலமைச்சராவது போன்று இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். தற்போது ஸ்பைடர் வேலைகள் முடிவடைந்து விட்டதால், முழுவீச்சில் இந்த படத்தில் நடிக்கப்போகிறாராம் மகேஷ்பாபு.