ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மே-20 ஆம் தேதி துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டி பாடம்' என்கிற படம் ரிலீஸாகிறது.. ராஜீவ் ரவி இயக்கத்தில் துல்கரின் ஜோடியாக ஷான் ரோமி நடித்துள்ளார். இது என்ன டைட்டிலே புதிதாக இருக்கறதே என மலையாளிகள் பலரும் தலையை சொறிய எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் 'அட.. நம்ம ஏரியா' என கித்தாப்பாக காலரை தூக்கிவிட்டுகொண்டார்கள்.. காரணம் இருக்கிறது ஐயா.. அண்டர்வேர்ல்டு கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் கதை நிகழும் களமான 'கம்மட்டி பாடம்' முன்பு எர்ணாகுளம் பகுதியில் பிரபலமான ஏரியாவாக இருந்தது.
அதனை குறிக்கும் விதமாகத்தான் தனது படத்திற்கு அந்த ஏரியாவின் பெயரையே வைத்தார் இயக்குனர் ராஜீவ் ரவி. இந்த ஏரியாவை சேர்ந்த தாதாகவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவரது கேங்க்ஸ்டர் நண்பனாக 'திமிரு' விநாயகம் நடித்துள்ளார். தற்போது இந்த கம்மட்டி பாடம் ஏரியா வடக்கு கிரி நகர், காந்தி நகர், குமரநேச நகர், ஜவஹர் நகர் நான்கு டிவிஷன்களாக பிரிந்துவிட்டதாம். இந்தப்படம் வெவ்வேறு காலகட்டத்தை பிரதிபலிப்பதால் படத்தில் துல்கர் சல்மானும் விதவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறாராம். இதற்காக தனது உடல் எடையை சுமார் 15 கிலோ வரை கூட்டி குறைத்துள்ளாராம் துல்கர்.