ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான நாகார்ஜுனா - அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜுவா எனும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அப்படத்திற்கு பின்னர் அகில் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் அகிலின் இரண்டாவது படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இவற்றை அகில் மறுத்துள்ளார். “எங்கிருந்து தான் இணையதளங்களுக்கு செய்திகள் கிடைக்கின்றன என தெரியவில்லை. மைத்திரி மூவீஸ் எனது இரண்டாவது படத்தை தயாரிக்க ஒப்பந்தமாகவில்லை. இவை தவறான தகவல்கள்” என டுவிட்டரில் சற்று காட்டமாகவே அகில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் அகிலின் இரண்டாவது படம் உருவாகலாம் என்றும் அப்படத்தை நாகார்ஜுனா தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.