ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவின் அரசியல் சூழல் தற்போது தங்களுக்கு சாதகமாக இல்லாததால் சுரேஷ்கோபியை வைத்து தான் இயக்குவதாக முடிவு செய்திருந்த 'தி ஸ்டேட்' என்கிற படத்தை இயக்குனர் ஷாஜி கைலாஷ் கைவிட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. சுரேஷ்கோபியும் இவரும் இணைந்த படம் என்றாலே அரசியல் அனல் வீசும், தபு செய்த போலீஸ் நடுநடுங்குவார்கள்.. படத்தில் தான்.. அந்த அளவுக்கு இதுவரை 16 படங்களில் இணைந்து தூள் கிளப்பிய இந்த கூட்டணி இந்தப்படத்தில் இருந்து பின்வாங்க காரணம் சரிதாநாயர் வழக்கு விவகாரம் தானாம்.
காரணம் இந்தப்படத்தின் மையக்கருவே கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் வழக்கும் அதில் சம்பந்தப்பட்டிருந்த சரிதா நாயரின் கதையும் தானாம். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் இருந்து சரிதா நாயர் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி முதல் இன்னும் பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பலரின் மீதும் புகாரை அள்ளி வீசிவருகிறார். இந்த உஷ்ணமான சூழலில் இந்தப்படத்தை எடுத்தால் தங்கள் இருவரின் கேரியரும் பாதிக்கப்படும் என்பதால் தான் இருவருமே மனமுவந்து இந்தப்படத்தை எடுக்கும் ஐடியாவை கைவிட்டுவிட்டார்களாம்.