ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரன் ஜோகர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது ஆலியா பட், சித்தார்த் மல்கோத்ரா ஜோடி. இவர்களின் இளமை துள்ளலான நடிப்பும், ரொமான்டிக்கான நடிப்பும் ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இவர்கள் இருவரிடையேயான கெமிஸ்ட் நன்றாக ஒர்க்கவுட் ஆனதால் சிறந்த பாலிவுட் திரை ஜோடி எனவும் இந்த ஜோடி பெயர் வாங்கியது. இந்த இந்த ஜோடியை மீண்டும் இணைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம் கரன். சித்தார்த், ஆலியா படங்களுடன் இந்த தகவலையும் கரன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இருப்பினும் ஆலியா பட், தற்போது விகாஷ் பாலி இயக்கும் ஷாந்தர் படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். சித்தார்த்தும் விக்ரமாதித்யா மோத்வானியின் பர்வேஷ் ஜோஷி படத்தின் சூட்டிங்கில் இருந்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் இந்த படங்களை முடித்த பிறகு கரன் ஜோகரின் புதிய பட வேலைகள் ஆரம்பமாக உள்ளதாம்.