பொன்விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, மறுமலர்ச்சி, வள்ளுவன் வாசுகி ஆகிய படங்களில் சிறந்த நடிப்புக்காக பேசப்பட்டார். பீஷ்மர் என்ற படத்தினை இயக்கியதன் மூலம் டைரக்டராக புரமோஷன் ஆன ரஞ்சித் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தை இயக்கி, நடிக்கவிருக்கிறார்.
அந்த படத்துக்கு, ரயிலு என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், ரஞ்சித் ஜோடியாக புதுமுகம் கரோலின் நடிக்கிறார். மற்றும் வினோத், நட்டு, இளவரசு, பாலு ஆனந்த், லட்சுமணன், வடிவுக்கரசி ஆகியோரும் நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, நல்லதம்பி என்ற புதிய இசையமைப்பாளர், இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார்.
லோகிததாஸ் டைரக்ஷனில், கேரளாவில் வெற்றிபெற்ற சல்லாபம் என்ற மலையாள படத்தை தழுவிய கதை இது. இதே கதை தெலுங்கில், பாவுரம்மா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. இரண்டு மொழிகளில் வெற்றிகண்ட இந்த படம்தான் தமிழில், ரயிலு என்ற பெயரில் தயாராகிறது. ஏ.கே.மீடியா விஷன் தயாரிக்கிறது.
- தினமலர் சினி டீம் -