சஞ்சீவ்
மோனிகா ஸ்ரீ பூங்காவனம் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீ பெரியாயி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் புதிய படம் குறும்புக்கார பசங்க. ஊரில் படித்துவிட்டு வேலை செய்யாமல் சுற்றி திரியும் நான்கு இளைஞர்கள் செய்யும் குறும்புத்தனங்கள். அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போட்டது என்பதே இப்படத்தின் கதை. இதில் எதார்த்தத்தை மீறாமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார் புதுமுகம் டி.சாமிதுரை. டைரக்டர்கள் லாரன்ஸ் மற்றும் மனோஜ் குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். மேலும் இவர் ஒரு மாற்றுதிறனாளியும் கூட.
இப்படத்தின் ஹீரோவாக சஞ்சீவ்வும், ஹீரோயினாக மோனிகாவும் நடிக்கி்ன்றனர். இவர்களுடன் பாண்டியராஜன், நெல்லை சிவா, செல்லதுரை, தவசி, பேபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தயாரிப்பதுடன் வில்லனாகவும் நடிக்கிறார் ரவிராஜன். அருள்ராஜ் இசையமைக்க, பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாமிதுரை.