Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

கிளிக் 3

கிளிக் 3,Click 3
  • கிளிக் 3
  • ரித்தேஷ் தேஷ்முக்
  • சதா
  • இயக்குனர்: சங்கீத் சிவன்
03 மார், 2012 - 09:03 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » கிளிக் 3

 இந்தியில் வெளிவந்த கிளிக் படம், தமிழில் கிளிக்-3 என்ற பெயரில் உருவாகியுள்ளது. கே.ஜி.எஸ்.புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பாக சாய்குமார், சலாடி சந்தோஷ்குமார், காரூக் கதவும்குமார் ஆகிய மூவரும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப்படத்தில் நாயகனாக ரித்தேஷ் தேஷ்முக்(ஜெனிலியா கணவரே தான்) நடித்துள்ளார். அவருடன் சதா, சினேகா உல்லல், ரியா சென் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். படத்தில் சதா இதுவரை இல்லாத அளவுக்கு படு கிளாமராக நடித்துள்ளார். அவர் மட்டுமல்லாது சினேகா உல்லல், ரியா சென் ஆகியோரும் கிளாமராக நடித்துள்ளனர்.

ரித்தேஷூம், சினேகா உல்லலும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்திலல் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். அந்தவேதனையில் சினேகா உல்லல் தற்கொலை செய்து ‌கொள்கிறார். அதன்பின்னர் ரித்தேஷூம்-சதாவும் காதலிக்கிறார்கள். அவர்களை இறந்துபோன சினேகா உல்லல் ஆவியாக வந்து அவர்களது காதலை தடுக்கிறார். கடைசியில் என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை. காதலும், ஆவியின் மிரட்டலுமாக படத்தை மிரட்டலாக இயக்கி இருக்கிறார் சங்கீத் சிவன். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in