பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக ஆகிய குடும்பப்பாங்கான கதையம்சம் உள்ள படங்களை இயக்கிய டைரக்டர் ராசு.மதுரவன், அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு "பாண்டி ஒலி பெருக்கி நிலையம்" என்று பெயர் சூட்டியுள்ளார். தனது நேசிகா திரையரங்கம் என்ற பட நிறுவனம் சார்பில் ராசு.மதுரவனே தயாரிக்கும் இப்படத்தில் சபரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், `மார்க்கண்டேயன் படத்தில் கதாநாயகனாக நடித்தவர். இவருக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், சூரி, ராஜ்கபூர், வையாபுரி, யோகி தேவராஜ், சிசர் மனோகர், சூப்பர்குட் லட்சுமணன், நாகேந்திரன் ஆகியோருடன் சில புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.
காதலும், நகைச்சுவையும் கலந்த படமாக இப்படம் உருவாகிறது. கவி பெரியதம்பி இசையமைக்க, யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை-திரைக்கதை-வசனம்-தயாரிப்பு-டைரக்ஷன்: ராசு.மதுரவன். திண்டுக்கல், தேனி, குரங்கனி, கம்பம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.