ஸ்ரீகாந்த்
பூனம் பஜ்வா சிக்ஸ்த்சென்ஸ் எனும் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் "எதிரி எண் - 3". படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இந்த ஜோடியுடன் பிரபு, சம்பத், ஜெய்பிரகாஷ், உமாபத்பநாபன், கிருஷ்ணமூர்த்தி, "கஜினி" ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினியராக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் சாதரணமாக ஒருவன் எப்படி குற்றவாளியாக்கப்படுகிறான் என்பதை கமர்ஷியலான கதையாக்கி படமாக்கிட இருக்கிறாராம் இயக்குநர் ராம்குமார். இவர் ஏற்கனவே "செமரகளை" எனும் படத்தை இயக்கியுள்ளார். தரண், இசையமைக்க, "அங்காடித்தெரு", "கோ", படங்களின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.கே.தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் சூட்டிங் கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.